-->
இரட்டை கோபுர தாக்குதல் 20-வது நினைவுதினம்; ஒற்றுமைதான் நமது மிகப்பெரிய வலிமை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

இரட்டை கோபுர தாக்குதல் 20-வது நினைவுதினம்; ஒற்றுமைதான் நமது மிகப்பெரிய வலிமை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின் 20-வது நினைவுதினத்தை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் வெளியிட்ட காணொலி செய்தியில் ஒற்றுமைதான் நமது மிகப்பெரிய வலிமை என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் இருந்தது. கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தற்கொலைப்படையினர், 4 பயணிகள் விமானங்களை கடத்தினர். இதில் 2 விமானங்களை இந்த கட்டிடங்களின் மீது மோதினர். இதில் இந்தக் கட்டிடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இதில் 2,977 பேர் உயிரிழந்தனர். ஒரு விமானம் வாஷிங்டனில் உள்ள ராணுவ தலைமையகத்தின் மீது மோதி வெடித்தது. மற்றொரு விமானம் பென்சில்வேனியாவில் தரையில் மோதி வெடித்துச் சிதறியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jZ0YwF

0 Response to "இரட்டை கோபுர தாக்குதல் 20-வது நினைவுதினம்; ஒற்றுமைதான் நமது மிகப்பெரிய வலிமை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்"

Post a Comment