-->
ஹெச்-1பி விசா குறித்து பைடனுடன் பேசினார் மோடி

ஹெச்-1பி விசா குறித்து பைடனுடன் பேசினார் மோடி

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹெச்1பி விசா விவகாரம் குறித்து அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்காவில் ஹெச்1பி விசா மூலம் பணியாற்றும் இந்தியர்கள் நாட்டின் பொருளாதாரத்திலும், சமூகப் பாதுகாப்பிலும் முக்கியப் பங்குவகிக்கின்றனர். சுமார் 2 லட்சம்இந்திய மாணவர்கள் அமெரிக்கபொருளாதாரத்தில் ஆண்டுக்கு 7.7 பில்லியன் டாலர் அளவுக்குபங்களித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் பணியாளர்களை அமெரிக்காவில் பணியில் அமர்த்த ஹெச்-1பிவிசா முறையையே நம்பியிருக்கிறார்கள். இந்த விசா முறைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் பெரும் பாதிப்புகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று பைடனிடம் மோடி தெரிவித்தார். இதைக் கேட்டுக்கொண்ட பைடன்தரப்பு இந்த விவகாரம் குறித்து பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CMrr7j

0 Response to "ஹெச்-1பி விசா குறித்து பைடனுடன் பேசினார் மோடி"

Post a Comment