-->
தலிபான்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு

தலிபான்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான்தீவிரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

இப்போது 3 மாகாண தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில், தலிபான்கள் கைப்பற்றிய ஷெபர்கான் பகுதியை மீட்பதற்கு ஆப்கன் ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க விமானப் படையினர் தலிபான்கள் நிலைகள் மீது பி-52 ரக வெடிகுண்டுகளை வீசியும், ஏசி-10ரக துப்பாக்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். மேலும் தலைநகர் காபுல் பகுதியில் தலிபான்கள் நுழையாத வண்ணம் அமெரிக்க ராணுவத்தின் எப்-16 ரக போர் விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iyRrMi

0 Response to "தலிபான்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு"

Post a Comment