-->
சிங்கப்பூரில் வெறும் 212 கிராம் எடையுடன் பிறந்த உலகின் மிகச் சிறிய குழந்தை 13 மாத சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியது

சிங்கப்பூரில் வெறும் 212 கிராம் எடையுடன் பிறந்த உலகின் மிகச் சிறிய குழந்தை 13 மாத சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியது

சிங்கப்பூரை சேர்ந்த குவெக் வீ லியாங், வாங் மீ லிங் தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். 2-வது முறை கருவுற்ற வாங் மீ லிங், ப்ரீ க்ளம்ப்சியா என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து, சிறுநீர் வழியாக புரோட்டீன் அதிக அளவு வெளியேறியது.

இதன் காரணமாக, கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் 4 மாதங்களுக்கு முன்பாகவே குறைபிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையின் எடை 212 கிராம் மட்டுமே இருந்தது. இதன் மூலம் உலகின் மிகச் சிறிய குழந்தை என அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Au6rkq

0 Response to "சிங்கப்பூரில் வெறும் 212 கிராம் எடையுடன் பிறந்த உலகின் மிகச் சிறிய குழந்தை 13 மாத சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியது"

Post a Comment